துபாயில் ஒர்க்அவுட் செய்யும் மகேஷ்பாபு
ADDED : 1689 days ago
பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் புதிய படம் சர்காரு வாரிபாட்டா. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு முன்பே மினாஷ் கேபிரியல் என்ற தனது பாடிபிட்னஸ் பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போது துபாய்க்கும் அவரை வரவழைத்து அங்கும் உடற்பயிற்சி செய்தபடியே படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. துபாயில் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ள மகேஷ்பாபு, இது உங்களுடன் எப்போதும் செய்யும் வேடிக்கையான பயிற்சி மினாஷ் கேபிரியல். என் எல்லைக்கு அப்பால் என்னை தள்ளியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.