உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவுக்கு கொரோனா நெகட்டிவ்

சூர்யாவுக்கு கொரோனா நெகட்டிவ்

நடிகர் சூர்யா கடந்த பிப்ரவரி7ம் தேதி அன்று தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தவர், அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக், பிப்ரவரி11-ந்தேதி அன்று சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டதாகவும், வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் தனது டுவிட்டரில், சூர்யாவிற்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாக ஒரு மகிழ்ச்சி செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !