நடிகையின் புது உத்தரவு
ADDED : 1689 days ago
திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளியில் நடிக்க வந்து வெற்றிப்படங்களாகக் கொடுத்து வந்தவர் அந்த நடிகை. ஆனால் அவரது சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இரட்டை வேடத்தில் நடித்த படத்திலிருந்து தான் இந்தச் சறுக்கல் எனக் கருதுகிறாராம் நடிகை. அதனால் இனி அதுபோன்ற வேடங்களில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறாராம் நடிகை. புதிதாக கதை சொல்ல வருபவர்களிடமும் இதனை கறாராகச் சொல்லி விடுகிறாராம். திருமண சமயத்தில் நடிகைக்கு இதே போன்ற கதாபாத்திரம் தான் விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கித் தந்தது. அப்போது அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டவர், இப்போது இப்படி நினைக்கிறாரே...