உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச்-5ல் வெளியாகும் சந்தீப்-லாவண்யாவின் ஏ-1' எக்ஸ்பிரஸ்

மார்ச்-5ல் வெளியாகும் சந்தீப்-லாவண்யாவின் ஏ-1' எக்ஸ்பிரஸ்

தமிழில் பிரம்மன், மாயவன் ஆகிய படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. இதில் மாயவன் படத்திற்கு பிறகு தற்போது தெலுங்கில் மீண்டும் சந்தீப் கிஷனுடன் இணைந்து 'ஏ1 எக்ஸ்பிரஸ்' என்கிற படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தின் ரீமேக்காகத்தான் இந்தப்படம் உருவாகியுள்ளது.

சந்தீப்பின் 25வது படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான டென்னிஸ் ஜீவன் கனுகோலனு என்பவர் இயக்கியுள்ளார். கொரோனா தாக்கம் துவங்குவதற்கு முன்பே இந்தப்படத்தின் வேலைகள் முடிந்துவிட்டாலும், படத்தை ரிலீஸ் செய்வதில் தயக்கம் காட்டி வந்தனர். இந்தநிலையில் வரும் மார்ச்-5ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருப்பதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !