விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன்
ADDED : 1687 days ago
தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தை அடுத்து உயர்ந்த மனிதன், பார்ட்டி படங்களில் நடித்துள்ள ரம்யாகிருஷ்ணன், தெலுங்கில் பாகுபலி, பாகுபலி-2 படங்களுக்கு பிறகு சில படங்களில் நடித்தவர் தற்போது லிகர், ரிபப்ளிக் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே ஜோடி சேர்ந்துள்ள ஹிந்தி படமான லிகரில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். மும்பையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொண்டுள்ளார் ரம்யா கிருஷ்ணன். அப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் அம்மா கெட்டப்பில் ரம்யாகிருஷ்ணன் தோன்றும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.