தெலுங்கில் அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா மேனன்
ADDED : 1687 days ago
ஆப்பிள் பெண்ணே, தமிழ்ப்படம்- 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் புதிய படத்தில் அறிமுகமாகிறார்.
கடந்த ஜனவரியில் வெளியான கிராக் படத்தைத் தொடர்ந்து கில்லாடி என்ற தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வரும் ரவிதேஜா, இந்தபடத்தை அடுத்து நாக்கினா திரிநாத ராவ் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மேலும், சோசியல் மீடியாவில் அதிரடியான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனனை தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.