ஆலியாபட்டின் ஹிந்திப்பட டீசரை பாராட்டிய ராஜமவுலி- ராம்சரண்
ADDED : 1686 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட், சமுத்திரகனி என பல நடித்து வரும் படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக சீதா வேடத்தில் நடிக்கிறார் ஆலியாபட். முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு அவர் மீண்டும் கலந்து கொள்ளப்போகிறார்.
இந்நிலையில், ஹிந்தியில் சஞ்சய்லீலா பஞ்சாலி இயக்கத் தில் ஆலியாபட் நடித்துள்ள கங்குபாய்கத்தியவாடி என்ற படத்தில் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் ஆலியாபட்டின் தோற்றம் மிகப்பொ¢ய வரவேற்பை பெற்று வரும் நிலையில், டைரக்டர் ராஜமவுலி தனது டுவிட்டா¢ல் கங்குபாய் கத்தியவாடி டீசர் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார். கங்குபாய் கத்தியவாடி டீசர் சுவராஸ்யமாக உள்ளது. சஞ்சய்லீலா பஞ்சாலியின் அற்புதமான படைப்பினை திரையில் காண ஆவலாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள் ளார்.
அதேபோல், ராம் சரண் தனது டுவிட்டர் பதிவில், டீசர் சூப்பர் சஞ்சய் சார். சிறந்த திரை இருப்பு. ஆலியா 08 படத்தை எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். ராம்சரணின் இந்த கனிவான வார்த்தைகளுக்கு ஆலியாபட் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூலை 30-ந் தேதி திரைக்கு வருகிறது.