லிங்குசாமி படத்தில் கையெழுத்திட்ட கிருதி ஷெட்டி- ரூ. 50 லட்சம் சம்பளம்
ADDED : 1731 days ago
தெலுங்கில் கடந்த பிப்ரவரி 12-ந்தேதி வெளியான உப்பெனா படத்தில் நாயகியாக நடித்தவர் கிருதி ஷெட்டி. முதல் படத்திலேயே இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதால் அந்த படத்தில் நடித்து வந்தபோதே நானிக்கு ஜோடியாக ஷியாம் சிங்கராய் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார்.
மேலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா இளவட்ட ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது போன்று இப்போது கிருதிஷெட்டியையும் ரசிகர்கள் கொண்டாடி வருவதால், அவரை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், உப்பெனா வெளியான பிறகு லிங்குசாமி தமிழ்- தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் ராமிற்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு தற்போது கையெழுத்திட்டுள்ள கிருதிஷெட்டிக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள் ளன.