உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயசேதுபதியின் ஹிந்தி பட டைட்டில் வெளியானது

விஜயசேதுபதியின் ஹிந்தி பட டைட்டில் வெளியானது

பல மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் விஜய சேதுபதி, மாஸ்டர் படத்திற்கு பிறகு உப்பெனா தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதையடுத்து தற்போது மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகார் படத்தில் சந்தோஷ்சிவன் இயக்கத்தில் நடிப்பவர், அதையடுத்து அந்தாதூன் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.


இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கைத்ரீனா கைப் நடிக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தற்போது இப்படத்துக்கு மேரி கிறிஸ்துமஸ் என்று டைட்டீல் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !