மார்ச் 20 முதல் சரித்திர படத்தில் நடிக்கிறார் சமந்தா
ADDED : 1767 days ago
அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்தை அடுத்து குணசேகரன் இயக்கும் படம் சகுந்தலம். புராணக் கதையில் உருவாகும் இந்த படத்திலும் அனுஷ்காவைதான் நடிக்க அழைத்தனர். ஆனால் அவர் கதை பிடிக்கவில்லை என்று மறுத்து விடவே, சமந்தா கமிட்டானார். சமந்தா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் தேவ்மோகன் நாயகனாக நடிக்கிறார்.
தற்போது விக்னேஷ்சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா, அதை முடித்ததும் சகுந்தலம் படத்தில் மார்ச் 20-ந்தேதி முதல் கலந்து கொள்கிறார். அப்படத்திகாக தற்போது ஐதராபாத்தில் பிரமாண்டமான செட் போடும் பணிகள் நடந்து வருகிறது.