களத்தில் இறங்கும் அண்ணாத்த ரஜினி
ADDED : 1710 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தபோது யூனிட் உள்ள 4 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு, ரஜினிக்கும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
அதையடுத்து அண்ணாத்த வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என்று பட நிறுவனம் அறிவித்த நிலையில் ரஜினி தவிர மற்ற நடிகர்-நடிகைகளின் காட்சிகள் அனைத்து படமாக்கப் பட்டு விட்டதால் ரஜினி எப்போது வருகிறாரோ அப்போது தான் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு என்று சொல்லி வந்தார் சிறுத்தை சிவா.
இந்நிலையில், மார்ச் 15-ந்தேதில் முதல் மீண்டும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்பிறகு தமிழ்நாட்டில் பொள்ளாச்சி உள்பட சில பகுதிகளில நடக்கும் படப்பிடிப்புகளிலும் அடுத்தடுத்து கலந்து கொள்கிறாராம் ரஜினி. இதனால் மார்ச், ஏப்ரலோடு அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தெரிய வந்துள்ளது.