'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ்
அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சாணி காயிதம்'. 'இன்று முதல் நடிகர்' என இப்படப்பிடிப்பில் நேற்று இணைந்தது பற்றி செல்வராகவன் டுவிட்டரில் பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டுள்ளார். “மற்றுமொரு பயணம் ஆரம்பம், உங்கள் அசீர்வாதம் தேவை” என படப்பிடிப்பில் கலந்து கொண்டது பற்றி புகைப்படங்களுடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கில் 'ரங் தே' படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அடுத்து மகேஷ் பாபு ஜோடியாக 'சர்க்காரு வாரி பாட்டா' படத்திலும், தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்திலும், மலையாளத்தில் 'வாஷி' படத்திலும் நடித்து வருகிறார்.
தெலுங்கில் அவர் நடித்துள்ள 'குட் லக் சகி' அடுத்த வெளியீடாக வர உள்ளது. மலையாளத்தில் 'மரைக்கார் - அரபிக்கடலின்டே சிம்ஹம்' வெளியாக உள்ளது.