கர்ப்பமாக இருக்கிறேன் : ரிச்சா தகவல்
ADDED : 1731 days ago
தனுஷின் மயக்கம் என்ன, சிம்புவின் ஒஸ்தி படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாயே. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்று படிப்பை தொடர்ந்த இவர், கடந்த ஆண்டில் ஜோ லங்கொல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டுள்ள ரிச்சா, வருகிற ஜூன் மாதத்தில் எங்கள் சிறிய பேபி இந்த உலகிற்கு வருகிறார். எங்கள் இதயம் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கிறது -என்று கர்ப்பமாக இருக்கும் ஒரு போட்டோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.