இரண்டாவது படத்தில் கமிட்டான வனிதா விஜயகுமார்!
பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானவர் வனிதா விஜயகுமார். ஆனால் சில மாதங்களிலேயே அவரை விட்டு பிரிந்த வனிதா, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தோன்றி மீண்டும் பிரபலமானதை அடுத்து, ஆதம் தாசன் இயக்கத்தில் அனல் காற்று என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அதையடுத்து தற்போது பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார் நாயகனாக அறிமுகமாகும் 2கே அழகானது காதல் -என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன் தொடங்கியது. தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முத்தமிழ் வர்மா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் கூறுகையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு பிடித்தமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். இந்த 2 கே அழகானது காதல் படத்தின் கதையை இயக்குனர் சொன்ன விதம் பிடித்திருந்தது. கிராமத்து கதையில் உருவாகும் இந்த படம் ஒரு அழகான காதலை சொல்லும் கதையில் உருவாகிறது. இந்த படத்தில் ஹரிநாடாருடன் இணைந்து நான் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன் என்கிறார் வனிதா.