கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல்
ADDED : 1780 days ago
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்பட பலர் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற கிராமிய பாடல் கடந்த மாதம் வெளியானது. அதோடு, ஒரு நாட்டுப்புற பாடகரின் பாடலை தழுவி அப்பாடல் உருவாக்கப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் மார்ச் 2-ம் தேதியான நாளை வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.