உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உப்பெனா - வியக்க வைத்த ஓடிடி உரிமை விலை

உப்பெனா - வியக்க வைத்த ஓடிடி உரிமை விலை

அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நாயகன், நாயகியாக நடித்து வெளிவந்த 'உப்பெனா' திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பும், வெற்றியும் தெலுங்கு திரையுலகத்தினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தாக்கத்திற்குப் பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு எப்படி வருவார்கள் என்ற சந்தேகத்தை இப்படம் போக்கியிருக்கிறது. இதுவரையிலும் 50 கோடிக்கும் மேல் இந்தப் படம் பங்குத் தொகையாக கொடுத்துவிட்டது என படத்தை வாங்கியவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அடுத்து ஓடிடியில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் மிக அதிக விலைக்குக் கேட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறதாம். சுமார் 7 கோடி வரை தரத் தயாராக இருக்கிறார்களாம். அறிமுக நடிகர்களின் படத்திற்கு இந்த அளவிற்கு விலை என்பது பெரிய தொகை.

இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஒடிடியில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !