70 மில்லியனை கடந்த வாத்தி கம்மிங்
ADDED : 1788 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் லாக்டவுனுக்கு பிறகு தியேட்டரில் வெளியான படங்களில் வெற்றிப்படமாக அமைந்தது. அதோடு, தியேட்டரில் வெளியாகி 16 நாளிலேயே ஓடிடி தளத்திலும் வெளியிட்டனர். ஆனபோதிலும் இப்போது வரை தியேட்டரிலும் மாஸ்டர் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
மேலும், அனிருத் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக, வாத்தி கம்மிங் பாடலை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருமே கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது அப்பாடல் யூடியூப்பில் 70 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.