கீர்த்தி சுரேஷின் மூன்று மொழி படம் ஜூனில் ரிலீஸ்
ADDED : 1681 days ago
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள புதிய படம் குட் லக் சகி. விளையாட்டு கதையில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதி, ஜெகபதிபாபு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டே வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஓடிடியிலும் வெளியிட முயற்சிகள் நடந்தன. இந்நிலையில் தற்போது ஜூன் 3-ல் இந்தப்படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தில்ராஜூ தயாரித்துள்ளார்.