ஜூனியர் என்டிஆர் படத்தை கைப்பற்றிய ராஷ்மிகா
ADDED : 1787 days ago
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பரவலாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாகி விட்டார். அந்த வகையில் தற்போது அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரிபாட்டா ஆகிய படங்களில் நடிப்பவர், அடுத்தபடியாக ஜூனியர் என்டிஆரின் 30ஆவது படத்தையும் கைப்பற்றியுள்ளார்.
திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்திற்காக ஆலியாபட், ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். வருகிற மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2022 ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.