உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விரைவில் 'வலிமை அப்டேட்' : ரசிகர்களின் ஆசை நிறைவேறும்?

விரைவில் 'வலிமை அப்டேட்' : ரசிகர்களின் ஆசை நிறைவேறும்?

வினோத் இயக்கத்தில் அஜித் நாயகனாக நடிக்கும் படம் 'வலிமை'. இப்படம் ஆரம்பமாகி இதுவரையிலும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ புகைப்படங்களோ, போஸ்டர்களோ வெளியாகவில்லை.

கடந்த சில மாதங்களாகவே அஜித் ரசிகர்கள் சம்பந்தமில்லாத இடங்களில் கூட 'வலிமை அப்டேட்' கேட்டார்கள். பிரதமரின் சென்னை விஜயம், சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டி, சமயங்களின் போதும் இந்த 'வலிமை அப்டேட்' கேட்டது சர்ச்சையானது. அதனால், நொந்து போன அஜித் கடைசியாக ஒரு அறிக்கை விட வேண்டிய அளவிற்கு நடந்தது.

'வலிமை' படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து, பதினைந்து நாட்கள் மட்டும்தான் நடக்க வேண்டி உள்ளதாம். அதை நடத்தி முடித்துவிட்டால் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுமாம்.

ரசிகர்களின் தொடர்ச்சியான தொந்தரவை அடுத்து விரைவில் படத்தின் அப்டேட் ஒன்றைக் கொடுக்கத் தயாராகி வருகிறார்களாம். அனேகமாக அது படத்தின் 'டைட்டில்' போஸ்டராக இருக்கும் என்கிறார்கள். 'வலிமை' என்ற டைட்டிலுக்கேற்ப அது அதிரடியாக இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !