உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகா கட்-அவுட்டுக்கு பூச்சூடிய ரசிகர்

ராஷ்மிகா கட்-அவுட்டுக்கு பூச்சூடிய ரசிகர்

சினிமா நடிகர்கள், நடிகைகளின் ரசிகர்களாகப் பலரும் இருப்போம். ஆனால், தீவிர ரசிகர், வெறித்தனமான ரசிகர் என சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அவர்கள் என்ன செய்வார்கள், தங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் கட் அவுட் வைப்பார்கள், பாலாபிஷேகம் செய்வார்கள். சரி, நடிகர்களுக்கு அப்படிச் செய்துவிடலாம், நடிகைகளுக்கு என்ன செய்வது ?.

ஒரு வெறித்தனமான ரசிகர், செய்தது என்ன தெரியுமா ?. தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா நடித்த 'பொகரு' படம் சமீபத்தில் வெளிவந்தது. அதற்காக படத்தின் பேனர் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த பேனரில் இருக்கும் ராஷ்மிகாவுக்கு அவரது தலையில் இரண்டு முழம் மல்லிகைப்பூ வைத்து பூச்சூடி மகிழ்ந்திருக்கிறார் ஒரு ரசிகர்.

அவர் அப்படிச் செய்த வீடியோவை ரசிகர் ஒருவர் பதிவிட்டு ராஷ்மிகாவுக்கும் டுவிட்டரில் டெக் செய்துள்ளார். அதற்கு ராஷ்மிகா 'ஹார்ட்டின்' எமோஜி போட்டு பதிலளித்திருக்கிறார். இப்படியான ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமா, அதிர்ச்சியா ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !