ஹிந்தி படத்தை ரீமேக் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி
ADDED : 1681 days ago
காமெடி வேடங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி, எல்கேஜி என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். அந்த படம் ஓரளவு வெற்றியை கொடுத்ததால், நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி, முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். கடந்த தீபாவளிக்கு ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அடுத்தபடியாக 2018ல் ஹிந்தியில் அமித் ரவிந்திரநாத் சர்மா இயக்கத்தில் வெளியான பாதாய் ஹோ என்ற காமெடி படத்தை தமிழில் ரீமேக் செய்ய தயாராகி விட்டார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த படத்திற்கு வீட்ல விசேஷங்க என்று தலைப்பு வைக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் ஏற்கனவே 1994ல் கே.பாக்யராஜ் இதே தலைப்பில் ஒரு படத்தை இயக்கி நடித்திருந்ததால், அவரிடத்தில் அதுகுறித்து ஒப்புதல் பெற்று இதற்கான அறிவிப்பை வெளியிட போகிறாராம் ஆர்.ஜே.பாலாஜி.