உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர் ஆனார் ஆலியா பட்

தயாரிப்பாளர் ஆனார் ஆலியா பட்

பாலிவுட் நடிகை ஆலியா பட் ன்னணி நடிகையாக இருக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் 30 கோடி ரூபாயில் வீடு வாங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். தற்போது மும்பை பெண் தாதா கங்குவாய் படத்திலும், எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார்.

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தந்தையின் வழியில் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். என்டர்னல் சன்சைன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தை ஆலியாபட்டின் சகோதரி நிர்வகிக்க இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !