உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டி படத்தின் டப்பிங் பணிகளை கவனிக்கும் ராம்

மம்முட்டி படத்தின் டப்பிங் பணிகளை கவனிக்கும் ராம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு மம்முட்டி நடிப்பில் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் படம் 'ஒன்'. முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.. குஞ்சாக்கோ போபன் நடித்த 'சிறகொடிஞ்ச கினாவுகள்' படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

தெலுங்கிலும் தமிழிலும் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை இயக்குனர் ராம் எழுதியுள்ளதுடன் படத்தின் டப்பிங் பணிகளையும் தற்போது மேற்பார்வை செய்து வருகிறார். ஏற்கனவே மம்முட்டி நடித்த மாமாங்கம் என்கிற வரலாற்று படத்திற்கும் இயக்குனர் ராம் தான் வசனம் எழுதியிருந்தார். மம்முட்டியை வைத்து தமிழில் பேரன்பு படத்தை இயக்கிய இயக்குனர் ராம், தொடர்ந்து மம்முட்டியின் குட்புக்கில் இடம் பெற்று, நட்பை தொடர்ந்து வருகிறார் என்பது இதன்மூலம் நன்றாகவே தெரிகிறது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !