நான்கு மொழி படத்தில் காஜல்
ADDED : 1785 days ago
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிஜ்லுவை திருமணம் செய்தார். தொடர்ந்து படங்களிலும் நடிக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தியில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார். ஐடி துறையில் நடந்த மிகப் பெரிய ஊழல் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. ஜெப்ரி ஜி சின் இயக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு, ஹிந்தி நடிகர் சுனில் ஷெட்டியும் நடிக்கின்றனர். நான்கு மொழிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தலைப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அனு அண்ட் அர்ஜூன்' என பெயரிட்டுள்ளனர்.