மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1646 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1646 days ago
செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படம் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதித்தது.
ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பெற்ற 1.24 கோடி கடன் காரணமாக ரேடியன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்து தடை பெற்றது. அதன்பின் படத்தின் வெளியீட்டிற்கான பேச்சு வார்த்தை நடந்தது. அதில் சுமூக முடிவு எட்டப்பட்டது. தற்போது படத்திற்கான தடை விலக்கப்பட்டுள்ளதாக படத்தின் நாயகன் எஸ்ஜே சூர்யா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“ரேடியன்ஸ் மீடியா மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இடையேயான பிரச்சினை தீர்க்கப்பட்டது. தற்போது தான் நீதிமன்றம் தடை விலகலை வழங்கியது. இப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் ரசிகர்களுக்கும், படம் வெளியாக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் நன்றி. நம்ம படம் உண்மையாவே ரிலீஸ் ஆகுதுங்க,” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
1646 days ago
1646 days ago