பகவான் படப்பிடிப்பில் பிக்பாஸ் வின்னர் ஆரி
ADDED : 1678 days ago
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னரான ஆரி, பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் பகவான் படத்தின் போஸ்டரை அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே வெளியிட்டனர்.
இந்நிலையில் இந்த பகவான் படம் குறித்த ஒரு அப்டேட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஆரி. அதில், பகவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் திருவண்ணாமலை அருகே உள்ள செஞ்சிக்கோட்டையில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். கலைஞன் இயக்கும் இந்த படத்திற்கு பிரசன் பாலா இசையமைக்கிறார்.