சஸ்பென்ஸ் திரில்லர் : ஸ்ரீகாந்த் ஜோடியாகும் சிரிஷ்டி டாங்கே
ADDED : 1677 days ago
ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக சிரிஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மணி பாரதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவை கவனிக்க, தாஜ் நூர் இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார்.