இளம் திறமையாளர்களுக்கான புதிய தளம்
ADDED : 1676 days ago
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் கடந்த வருடங்களில் பல புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வெற்றி பெறச் செய்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இந்நிறுவனத்தின் மூலம் மேலும் பல புதிய இளம் திறமைகளின் திரைப்படங்கள் இந்தாண்டு அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன.
இந்நிலையில் திரைத்துறையில், தங்களின் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை, அடையாளப்படுத்தும் விதமாக “Vels Signature” எனும் புதிய தளமொன்றை ஐசரி கணேஷ் நிறுவியுள்ளார். இந்நிறுவனம் Conzept Note நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும், புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவிக்கும்.