லிங்குசாமி படத்தில் இணைந்த கீர்த்தி ஷெட்டி
ADDED : 1676 days ago
தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியை வைத்து ஒரு படம் இயக்குகிறார் லிங்குசாமி. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை RAPO19 என தற்காலிகமாக குறிப்பிட்டு வருகின்றனர். கடந்தவாரம் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமான நிலையில் இப்போது நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் பெரும் ஆளுமைமிக்க தொழில்நுட்ப கலைஞர்களுடன் மாஸ் ஆக்சன் படமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது.