மிஷன் மஞ்சு படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா
ADDED : 1673 days ago
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்கிற ஒரே படத்தின் மூலம் குறுகிய காலத்தில் புகழ்பெற்று முன்னணி நடிகைகள் வரிசைக்கு உயர்ந்தவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. அதை தொடர்ந்து தற்போது தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் 'மிஷன் மஞ்சு' என்கிற படம் மூலமாக பாலிவுட்டிலும் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார் ராஷ்மிகா.
நேற்றுமுதல் துவங்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பில் ராஷ்மிகாவும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்தப்படத்தின் கிளாப் போர்டுடன் தனது கண்களை மட்டும் காட்டும் விதமாக ராஷ்மிகா, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சாந்தனு பாக்சி என்பவர் இயக்குகிறார்.