மீண்டும் வருகிறார் தேவயானி
ADDED : 1673 days ago
கோலங்கள் தொடர் மூலம் அன்றைக்கு தமிழக பெண்களை வீட்டுக்குள் தொலைக்காட்சி பெட்டி முன் கட்டிப்போட்டவர் தேவயானி. 6 வருடங்களாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி சாதனை படைத்த தொடர் அது.
இந்த நிலையில் 12 வருடங்களுக்கு பிறகு கோலங்கள் தொடரில் நடித்த தேவயானியும், அபி பாஸ்கரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் தொடரின் 2வது சீசனில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த சீரியலின் பூஜை விமரிசையாக நடைபெற்று உள்ளது. அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.