விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ்
ADDED : 1675 days ago
நானும் ரவுடிதான் உள்பட சில படங்களில் நடித்துள்ள சின்னத்திரை தொகுப்பாளர் லோகேஷ், கடந்த ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்த விஜய் சேதுபதி அவருக்கு பண உதவியும் செய்துள்ளார். இவரைப்போன்று சில நடிகர்கள் உதவி செய்தனர்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது பூரண நலமடைந்து விட்டார் லோகேஷ். இந்நிலையில் விஜய் சேதுபதியை தனது வீட்டிற்கு அழைத்து கேக் வெட்டி அவருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் லோகேஷ். இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லோகேஷ், என்னை மீண்டும் கொண்டு வந்ததற்கு, விஜய் சேதுபதி அண்ணாவிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.