மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால்
ADDED : 1674 days ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக சகுந்தலம் என்ற சரித்திர படத்திலும் நடிக்கப்போகிறார். இந்நிலையில், உலக மகளிர் தினமாக மார்ச் 8-ந்தேதியில் இருந்து தான் ஒரு புதிய சவாலை ஏற்கப்போவதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா.
அதில், ''நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நம்முடைய மதிப்பிற்கு குறைவான தகுதிகளை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. இந்த மகளிர் தினத்தில் இருந்து என்னை நான் இன்னும் அதிகமாக நம்பப்போகிறேன். நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்தவொரு செயலும், மாற்றமும் உங்களிடமிருந்து தான் தொடங்க வேண்டும். மாற்றத்திற்கான சவாலை நான் ஏற்றுள்ளேன், நீங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.