உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித்

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித்

நடிகர்களில் மிகவும் வித்தியாசமானவர் அஜித். தன் வழி என்றுமே தனி வழி என பயனிப்பவர். பைக் ரேஸ், கார் ரேஸ், சிறிய ரக டிரோன் தயாரிப்பு, போட்டோகிராபி ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வம் காட்டி வருவதோடு அதற்கான பயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

தற்போது வலிமை படப்பிடிப்பின் ஓய்வில் இருக்கும் அஜித் கடந்த இருவாரங்களாக சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தன.


இந்நிலையில் மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கம் வென்று அசத்தி உள்ளார். தமிழக அளவிலான 46வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிங் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அஜித் தங்கம் வென்றுள்ளார். கடந்த மார்ச் 3 முதல் 7 வரை நடந்த இந்த போட்டியில் தமிழக முழுக்க சுமார் 900 வீரர்கள் பங்கேற்றனர். அஜித்தின் இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு அஜித்தின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தல போல வருமா என கொண்டாடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !