உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷிவானி ஏற்படுத்தும் பரபரப்பு

ஷிவானி ஏற்படுத்தும் பரபரப்பு

பிக்பாஸ் சீசன் -4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே சீரியல்களில் நடித்து பிரபலமாகியிருந்த ஷிவானி, தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டும் கலக்கல் செய்து வந்தார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அந்த கிளாமர் போட்டோக்களை நீக்கினார். அதனால் இனிமேல் ஷிவானி கிளாமர் போட்டோக்களை பதிவிட மாட்டாரோ என்றுதான் அனைவருமே கருதினார்கள்.

ஆனால் இப்போது மறுபடியும் இன்ஸ்டாகிராமில் அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு இளவட்ட ரசிகர்களின் கவர்ந்திழுத்து வருகிறார் ஷிவானி. தற்போது கறுப்பு கோட் சூட் அணிந்து அவர் பதிவிட்டுள்ள போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதைப்பார்த்து, பில்லா நயன்தாராவையே தூக்கி சாப்பிட்டு விடுவார் போலிருக்கே என்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !