ரூ. 14 கோடி சம்பளம்- சலசலப்பை ஏற்படுத்திய நானி
ADDED : 1715 days ago
நான் ஈ பட நாயகனான நானி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். தற்போது ஷியாம் சிங்கா ராய், ஆன்டே சுந்தரனிகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு இன்னொரு புதிய படத்தில் நடிக்கப்போகிறார். சுதாகர் செருகுரி என்பவர் தயாரிக்கும் அப்படத்தில் நடிக்க ரூ.14 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம் நானி.
இதுவரை 10 முதல் 11 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நானி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான மூன்று படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி வந்துள்ளன. ஆனபோதிலும் தனது புதிய படத்தில் நடிக்க அவர் ரூ. 14 கோடி சம்பளம் பேசியிருப்பது தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.