உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய அல்லு அர்ஜூன்!

திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய அல்லு அர்ஜூன்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது மனைவி சினேகா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அல்லு அர்ஜூன்-சினேகா தம்பதிக்கு 2011ல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தங்களது பத்தாவது திருமண நாளை கடந்த மார்ச் 6-ந்தேதி ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அப்போது காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு முன்பு நின்று தனது மனைவி சினேகாவுடன் ரொமான்டிக் மூடில் நடனமாடி மகிழ்ந்திருக்கிறார் அல்லு அர்ஜூன். அந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !