உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போலீஸ் வேடத்தில் யாஷிகா

போலீஸ் வேடத்தில் யாஷிகா

முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் சல்பர் யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் யாஷிகா அனந்த் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.

சென்னையில் ஒரு காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றும் பாரதியான யாஷிகா, பணியிடை மாற்றத்தால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாறுகிறார். அங்கு வரும் ஒரு அழைப்பிலிருந்து அவருக்கு ஒரு வழக்கின் விசாரணை தீவிரமாகிறது. அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை ஆக்ஷன் கலந்த திரில்லர் பாணியில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !