உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பரத் ஜோடி வாணி போஜன்

பரத் ஜோடி வாணி போஜன்

சீரியலில் பிரபலமாக இருந்த நடிகை வாணி போஜன், ஓ மை கடவுளே படத்திற்கு பின் சினிமாவில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். தற்போது விக்ரமின் 60வது படம், விக்ரம் பிரபு உடன் ஒரு படம், சசிகுமார் உடன் ஒரு படம் என நடித்து வருகிறார். இவரைத்தேடி மேலும் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்து புதியவர் ஒரு இயக்கும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படத்தில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளார். அடுத்தமாதம் சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !