மேலும் செய்திகள்
விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்!
1656 days ago
'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு!
1656 days ago
'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
1656 days ago
மலையாளத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படம் த்ரிஷ்யம். மோகன்லால் மீனா உள்ளிட்ட அதே கூட்டணியுடன் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகத்தை 'த்ரிஷ்யம்-2'வாக இயக்கி வெளியிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப். முதல் பாகத்திற்கு இணையான த்ரில் மற்றும் திருப்பங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது..
இந்தநிலையில் ஐஎம்டிபி எனப்படும் இணையதள தரவரிசை பட்டியலில் த்ரிஷயம்-2 இடம் பிடித்துள்ளது. முதல் பத்து படங்களுக்கான பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருந்தாலும் கூட, அதிக பாயிண்ட்டுகள் என்கிற கணக்கில் த்ரிஷ்யம்-2 தான் முன்னிலை வகிக்கிறது. இந்தப்படம் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானதால், பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்களும் படம் பார்த்துவிட்டு பாராட்டியது இந்தப்படத்திற்கு இலவச புரமோஷனாக மாறி, .இதோ தற்போது இந்த புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.
1656 days ago
1656 days ago
1656 days ago