கார்த்தியின் சுல்தான் - ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு?
ADDED : 1684 days ago
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி-ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள படம் சுல்தான். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அப்போதே இப்படத்தை ஏப்ரல் 2-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஏப்ரல் 6ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால், சுல்தான் படத்தை ஏப்ரல் 2-ந்தேதி வெளியிடாமல் ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஒருநாளில் வெளியிடலாம் என்று சுல்தான் படக்குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.