பெண் இருக்குமிடத்தில் மேஜிக் உள்ளது :- ரகுல் பிரீத் சிங்
ADDED : 1684 days ago
இந்தியன் -2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஹிந்தியில் தற்போது நான்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி பேட்டோக்கள் மட்டுமின்றி அதிரடியான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார் ரகுல். அதில், ''ஒரு பெண் இருக்குமிடத்தில் மேஜிக் உள்ளது. நீங்கள் அனைவரும் அழகான, வலிமையான, சுதந்திரமான பெண்கள். அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள். உங்களை தினமும் கொண்டாடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.