மனைவியிடம் தோற்ற ஜெயம்ரவி
ADDED : 1683 days ago
சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்கள், சவால்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவரது மனைவி ஆர்த்தி ஒரு உடற்பயிற்சி செய்ய, அதை அப்படியே தானும் செய்கிறார் ஜெயம்ரவி. ஆனால் ஆர்த்தி அளவுக்கு அந்த உடற்பயிற்சியை செய்ய முடியாமல் மனைவியிடத்தில் தோற்றுப்போகிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஜெயம்ரவி, ''பெண்கள் எதையும் செய்யலாம். உங்கள் அன்பிற்குரியவருடன் இதை முயற்சிக்கவும். நீங்கள் அனைவரும் வலுவான பெண்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.