சாய் பல்லவி தங்கையும் நடிகையானார்
ADDED : 1686 days ago
பிரேமம் படம் மூலம் பிரபலமாகி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வருபவர் சாய் பல்லவி. இவரின் தங்கை பூஜாவும் அக்கா வழியில் நடிகையாக களமிறங்கி உள்ளார். இயக்குனர் விஜய் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கும் ஒரு படத்தில் நடிகர் சமுத்திரகனியின் மகளாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் சாயலில் இப்படம் தயாராகிறது. கோவையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய்யிடம் உதவி இயக்குனராக பூஜா வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.