உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இனிமேல் இப்படித்தான்! : நடிகை கறார்

இனிமேல் இப்படித்தான்! : நடிகை கறார்

தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக நடித்து வரும் நடிகை அவர். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பிரபலமான அவருக்கு கைவசம் முன்னணி நடிகர்களின் படங்கள் உள்ளது. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் நடித்து வரும் அவர், இயக்குநர்களுக்கு புதிதாக கண்டிசன்கள் போடுகிறாராம். அதாவது, 'இனிமேல் நாயகர்களுடன் டூயட் எல்லாம் வைக்க வேண்டாம், காதல், ரொமான்ஸ் காட்சிகளில் எல்லாம் முன்போல் நடிக்க முடியாது' என கறாராகச் சொல்கிறாராம்.

ஏற்கனவே கதை கேட்டுவிட்டுத் தானே நடிக்க சம்மதித்தார். இப்போது திடீரென இப்படி சொல்கிறாரே என இயக்குநர்கள் புலம்பி வருகிறார்களாம். புதிதாக கதை சொல்ல வருபவர்களிடம் இதே கண்டிசன்களை மறக்காமல் சொல்லி விடுகிறாராம் நடிகை.

திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் பிரச்சினை வரும் என நடிகை நினைப்பது சரி தான். ஆனால் சம்பளத்தை மட்டும் பழைய மாதிரியே கோடிகளில் எதிர்பார்க்கிறாரே.. அதையும் குறைத்துக் கொள்ள வேண்டாமா என ஆதங்கப் படுகின்றனர் இயக்குநர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !