உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வீடியோ மூலம் வாழ்த்து சொன்ன ஆரி

வீடியோ மூலம் வாழ்த்து சொன்ன ஆரி

தமிழில் நெடுஞ்சாலை உட்பட சில படங்களில் நாயகனாக நடித்தவர் ஆரி. சமூகம் சார்ந்த நல்ல விசயங்களில் தனது பங்களிப்பை அளித்து வந்தவரை, பிக் பாஸ் சீசன் 4 மேலும் பிரபலமாக்கி விட்டது. பிக் பாஸ் டைட்டிலை வென்றதுடன், மக்களிடம் நல்ல பெயரையும் பெற்று விட்டார்.

இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி ஆரி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
'என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்ட அம்மாக்களுக்கும்,
என்னை தம்பியாக ஏற்றுக்கொண்ட அக்காக்களுக்கும்,
என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்ட தங்கைகளுக்கும்,
எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
என் வெற்றிக்காக உழைத்த அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்' என அவர் தெரிவித்துள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !