உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை

மாரி செல்வராஜ் - திவ்யா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை

பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள படம் கர்ணன். ஏப்ரல் 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் வெளியிடப்பட்டு ஹிட் அடித்துள்ளது.

இந்த படத்தை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார் மாரிசெல்வராஜ். சமீபத்தில் மாரிசெல்வராஜின் மனைவி திவ்யாவுக்கு வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதையடுத்து தனது குழந்தையை மாரிசெல்வராஜ் வைத்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மாரி செல்வராஜ்-திவ்யா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !