உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 25வது திருமணநாளை கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

25வது திருமணநாளை கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

தற்போது பொன்னியின் செல்வன், அயலான், பத்து தல என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அதோடு இவர் கதை எழுதி தயாரித்து வரும் 99 சாங்ஸ் என்ற படம் வருகிற ஏப்ரல் 16-ந்தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இன்று தனது 25ஆவது திருமணநாளை மகிழ்ச்சியுடன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ரஹ்மான். அதில் மனைவி சைராபானுவுடன் தான் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து 25 +1 என்று பதிவிட்டுள்ளார். திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரஹ்மான் - சைரா தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !