சிவராத்திரி விழாவில் நடனமாடிய சமந்தா - ரகுல்
ADDED : 1714 days ago
மகாசிவராத்திரி விழா கோவையில் உள்ள இஷா யோகா மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு குறைவான பக்தர்களே இந்த மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங், லட்சுமி மஞ்சு உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதோடு சக நடிகைகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு உற்சாக நடனமாடியிருக்கிறார் சமந்தா. மேலும், தனது சக சினிமா தோழிகளுடன் ஆதியோகியின் சிலை முன்பு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா.